#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"விரைவில்" என போஸ்டர் ஒட்டி பழிக்குப்பழி சம்பவம்?.. இளைஞர் கொலை வழக்கில் பரபரப்பு போஸ்டர்.!
இளைஞர் கைவிரல்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பழிக்குப்பழி கொலை நடந்துள்ளதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரம் பகுதியை சார்ந்தவர் குழந்தை. இவரது மகன் பெலிக்ஸ் ஜான்சன் (வயது 28). இவர் நேற்று முன்தினம், மாவடிக்குளம் அருகே ஆட்டோவில் சென்று கொண்டு இருக்கையில், இவரை வழிமறித்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியுள்ளனர். மேலும், ஜான்சனின் முகம் சிதைக்கப்பட்டு, கைவிரல் துண்டிக்கப்பட்டு கொலை நடந்துள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் பெலிக்ஸ் ஜான்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த திருவெறும்பூர் காவல் துறையினர், பெலிக்ஸ் ஜான்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளின் தடயத்தை தேடி வந்தனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த சில மாத்திற்கு முன்னதாக திருச்சி பொன்மலைப்பட்டி கடைவீதியில் சின்ராஜ் என்பவர் கொலையான வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி அலெக்சின் தம்பி பெலிக்ஸ் ஜான்சன் என்பது தெரியவந்தது.
சின்ராஜின் மரணத்திற்கு பின்னர், அவரின் நண்பர்கள் பதிவிட்ட இரங்கல் சுவரொட்டியில், "விரைவில்" என்ற வாசகத்துடன் நூதனமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ரவுடி அலெக்சின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக எண்ணி வந்த புகாரில், அன்றைய நாளிலேயே பொன்மலை காவல் துறையினர் சின்ராஜின் தரப்பினரையும் கைது செய்தும் இருந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது விசாரணை வளையத்தில் இருக்கின்றனர்.
இந்த விஷயம் தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. பழிக்குப்பழி கொலை சம்பவம் திருச்சி பகுதிகளில் அதிகரித்து இருப்பதாகவும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.