#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விவசாய நிலத்தில் தம்பதி வெட்டிக்கொலை; மர்ம கொலையால் அதிர்ச்சியில் திருச்சி மக்கள்..!
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் மேட்டூர் பகுதியை சார்ந்தவர் ராஜ்குமார் (வயது 29), மனைவி சாரதா (வயது 24). தம்பதிகள் சோபனபுரத்தில் விஜய் சேகரன் என்பவரின் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்திருக்கின்றனர்.
இருவரும் விவசாய வேலைகளை செய்து வந்துள்ளனர். நேற்று விஜய் சேகரன் தோட்டத்திற்கு வந்துவிட்டு மீண்டும் சோபனாபுரம் சென்றுள்ளார். மீண்டும் தோட்டத்திற்கு வந்தபோது வீட்டு வாசலில் இருக்கும் இரும்பு கட்டிலில் ராஜ்குமார் & சாரதா சடலமாக இருந்தனர்.
இவர்கள் தலையில் வெட்டு காயத்துடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருந்தனர். அவர்களின் வீட்டில் எந்த பொருட்களும் திருட போகாத நிலையில், இருவரும் எதற்காக கொலை செய்யப்பட்டார்கள்? என்ற விசாரணை நடந்து வருகிறது.