#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெற்றெடுத்த மகனை தாய் வெட்டிக்கொன்ற பயங்கரம்.. விசாரணையில் அதிர்ச்சி திருப்பம்.. வெளியான பரிதாப தகவல்.!
மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாயாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், மகனை தாயே அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர், சீனிவாசன் நகரில் வசித்து வருபவர் புனிதா (வயது 58). இவரின் மகன் விஜயராகவன் (வயது 27). இவருக்கு மனநலம் சரியில்லாத நிலையில், கடந்த 7 வருடமாக வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னதாக மகன் விஜயராகவன் வீட்டில் கத்தியால் கழுத்தை குத்தி தற்கொலை செய்ததாக உறையூர் காவல் நிலையத்திற்கு புனிதா தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விஜயரகனின் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் முடிவில், வீராராகவன் தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, வீரராகவனை கொலை செய்தது யார்? என்ற விசாரணையில் அதிகாரிகளின் கவனம் தாயார் புனிதாவின் மீது திரும்பவே, அவர் மகனை கொலை செய்து நாடகமாடியது அம்பலமானது. மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கடந்த சில நாட்களாக மதியிழந்த சூழலில் தாயாருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயத்தில் புனிதா மகனை கொலை செய்தது உறுதியானது. அவரை கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.