#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் நிகழ்ந்த கோர விபத்து... வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 2 பலி!!
கேரளாவிருந்து சாக்குப்பைகளை ஏற்றி கொண்டு கரூர் வழியாக அரியலூர் நோக்கி லாரி ஒன்று சென்றுள்ளது. அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியிலிருந்து சரவணன் மற்றும் மாரியப்பன் என்ற நபர்கள் மாடு வாங்குவதற்காக கரூர் வழியாக காங்கேயம் நோக்கி டாடா ஏசி வேனில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாயனூர் வாய்க்கால் பாலம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக லாரியும் டாட்டா ஏசி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டு பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் டாடா ஏசி வேனின் முன்பாகம் உருத்தெரியாத அளவுக்கு அப்பளம் போல நொறுங்கியது.
இதில் டாடா ஏசி வேனில் இருந்த சரவணன் மற்றும் மாரியப்பன் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே விரைந்து வந்த போலீசார் சரவணன் மற்றும் மாரியப்பனை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோர விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.