டிடிவி தினகரன் மகள் திருமணம்! யார் தலைமையில் திருமணம் நடக்கும்? டிடிவி தினகரனின் சம்பந்தி யார் தெரியுமா?



ttv dinakaran daughter marriage

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) பொதுச் செயலாளரும், சென்னை ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், தஞ்சாவூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான துளசி வாண்டையார் பேரனும், கிருஷ்ணசாமி வாண்டையார் மகனுமான ராமநாதன் துளசி அய்யா வாண்டையாருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

TTV

அதன்படி, புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலை பண்ணை வீட்டில் எளிய முறையில் அவர்களின்  நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டனர். அடுத்து வரும் 3 மாதங்களில் திருமண ஏற்பாடுகள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததும் அவரது தலைமையில் திருமணத்தை நடத்தலாம் என டிடிவி தினகரன் கூறியதாக தெரிகிறது. இதற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

TTV

தமிழக அரசியலில் மீண்டும் சசிகலா திரும்புவதற்கு இந்த திருமணம் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும், என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமணத்தில் தற்போதுள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்றும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.