"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
தலைக்கேறிய போதை..! ஆலங்குடி அரசமரத்தில் இளைஞர்கள் சரமாரி தாக்குதல்.! போதை தெளிந்து கம்பி எண்ணும் வாலிபர்கள்.!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலம் ஊராட்சி பரப்பான்காட்டை சேர்ந்த தேவா மற்றும் கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை பகுதியை சேர்ந்த ஆதிகிருஷ்ணன் ஆகிய இரண்டு வாலிபர்களும் ஆலங்குடி அரசமரம் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கீழநெம்மக்கோட்டையை சேர்ந்த வினோத் மற்றும் மேலநெம்மக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் ஆகிய இரண்டு வாலிபர்களும் மது போதையில் அங்கு வந்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த தேவா, ஆதிகிருஷ்ணன் ஆகியோரை இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த தேவா மற்றும் ஆதிகிருஷ்ணன் ஆகிய இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுருகன், வினோத் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். ஆலங்குடி பகுதியில் மது போதையால் இளைஞர்கள் பலர் அவர்களது எதிர்காலத்தை சீரழித்து வருகின்றனர்.