இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா?. தமிழகம் முழுவதிலிருந்தும் குவிந்து வரும் பாராட்டுக்கள்!. புதுக்கோட்டைக்கு பெருமை!.



University gave award for social worker


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த சோமசுந்தரம் செட்டியார் இவர்களின் மகன் கணேசன். இவருக்கு, ஐந்து பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர் வாகனத்தின் வண்டி எண் 515. இதனால் இவரை 515 கணேசன் என்றே அனைவரும் அழைப்பார்கள்.  


1969-ல் தொடங்கி 49 ஆண்டு காலம் பொதுச் சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவர் இதுவரை 5,459 பிணங்களை தமிழகம் பாண்டிச்சேரி,ஆந்திரா,கேரளா போன்ற மாநிலங்களுக்கு குறைந்த செலவில் எடுத்துக்கொண்டு ஒப்படைத்திருக்கிறார். மேலும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் அனாதைப் பிணங்களை கூட இவரே தன் சொந்த செலவில் அடக்கம் செய்து வந்துள்ளார். 

Social worker

அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட 2229 கர்ப்பிணி பெண்களை  மருத்துவமனைக்கு இலவசமாக அழைத்துச் சென்றிருக்கிறார். மேலும் விபத்தில் சிக்கிய 2829 நபர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிர் பிழைக்க வைத்திருக்கிறார்.

நாகை மாவட்டத்தில் சுனாமி விபத்தில் சிக்கிய மக்களுக்கு 2 லாரிகள் மூலம் நிவாரண பொருட்களை வசூல் செய்து 327 குடும்பங்களுக்கு ஒப்படைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல சில ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளத்தில் சிக்கி தவித்த கடலூர் மக்களுக்கு, இரண்டு லாரிகள் மூலம் 3லட்சம் ரூபாய் அடங்கிய நிவாரண பொருட்களை வசூல் செய்து கொடுத்திருக்கிறார்.

Social worker

தனக்குப் பிறந்த  ஐந்து பெண் குழந்தைகளை முறையாக வளர்த்து, படிக்க வைத்து, கட்டிக் கொடுத்தது  மட்டுமல்லாமல் இரண்டு சமுதாய ஏழைப் பெண்களை தன் சொந்த முயற்சியில் வசூல் செய்து கட்டிக் கொடுத்திருக்கிறார்.

இதுவரை இந்தியா முழுவதும் இருந்து இவருக்கு 34 விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.

நேற்று இவருக்கு பெங்களூர் பல்கலைக்கழகம் இவரின் சமூக சேவையை பாராட்டி, #டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பு செய்துள்ளது.

Social worker
ஏழை குடும்பத்தில் பிறந்து, நாற்பத்தொன்பது ஆண்டுகாலம் பொதுப் பணியில் ஈடுபட்டு வருகிறார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

சாலையில் தொடர்ந்து பள்ளமாக இருக்கும் பள்ளங்களை தன் கார் மூலம் கல், மணல் கொண்டு வந்து நிரப்புகிறார்.

நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் கிடக்கும் குப்பைகளை அகற்றுதல், பசியால் வாடும் ஏழைகளுக்கு சொந்த பனத்தில் உணவு வாங்கிக் கொடுத்தல், இதுபோன்ற சேவைகளை தொடர்ந்து செய்து வரும் இவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.