பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#வீடியோ: அடடே.. அட்டகாசம்..! இரயில் எஞ்சின், 2 பெட்டிகளில் தீ... இரயில் பெட்டிகளை பிரித்து தள்ளிவிட்ட பயணிகள்..!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் நகரில் இருந்து டெல்லிக்கு அதிவிரைவு இரயில் சென்று கொண்டு இருந்தது. இந்த இரயில் இன்று மீரட் அருகேயுள்ள தவுராளா நகர் நிலையத்திற்கு வந்தபோது, எஞ்சின் மற்றும் அதன் அருகே உள்ள 2 பெட்டிகளில் திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது.
இதனையடுத்து, கரும்புகையை கண்ட இரயில் ஓட்டுநர், உடனடியாக இரயிலை நிறுத்தியுள்ளார். சுதாரித்த அதிகாரிகள் பிற பெட்டிகளை தனியே கழற்றியுள்ளனர். பயணிகளும் அலறியபடி இரயிலில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.
இரயில்வே அதிகாரிகள் 2 பெட்டிகளை பிரிப்பதற்குள் தீயானது மளமளவென பரவியுள்ளது. இரயில் பெட்டிகளை பிரித்த அதிகாரிகள், பயணிகளின் உதவியுடன் தீப்பிடிக்காத பெட்டிகளை தூரமாக நகர்த்தி சென்று நிறுத்தியுள்ளனர். தீயணைப்பு துறை அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
டெல்லி சேரவேண்டிய பயணிகள் அவ்வழியே வந்த மற்றொரு இரயில் மூலமாக பயணம் செய்ய அனுமதி வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர். எஞ்சினில் இருந்த மோட்டாரில் இருந்து தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணை நடந்து வருகிறது.
#WATCH | Uttar Pradesh: Fire broke out in engine & two compartments of a Saharanpur-Delhi train, at Daurala railway station near Meerut.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 5, 2022
Passengers push the train in a bid to separate the rest of the compartments from the engine and two compartments on which the fire broke out. pic.twitter.com/Vp2sCcLFsd