#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான்கு பக்கமும் மரணம் சூழ்ந்தபோது கெத்தாக நின்ற பிரபாகரன் எங்கே.... தப்பியோட நினைக்கும் ராஜபக்ச எங்கே.! வைரமுத்து ட்விட்
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், நேற்று கடும் வன்முறை வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில், ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. .
ராஜபக்சேவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததை தொடர்ந்து அவர் விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சுழ்நிலை குறித்து கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நான்கு பக்கம்
— வைரமுத்து (@Vairamuthu) May 11, 2022
மரணம் சூழ்ந்தபோதும்
'தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே...
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே...
ஓ
சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு#SriLanka
அதில், நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் 'தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே...
ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே...
ஓ சர்வதேச சமூகமே! இப்போதேனும் தமிழன் வீரத்திற்குத் தலைவணங்கு” என்று பதிவிட்டுள்ளார்.