#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
புலம்பெயர் தொழிலாளர்கள் 2000 பேருக்கு பிரபல தமிழ்நடிகை செய்த பெரும் உதவி! குவியும் வாழ்த்துக்கள்!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழிலாளர்கள் பலரும் வேலையின்றி, வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் வேலை பார்த்துவந்த பீகார், மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப துவங்கினர். இந்த சூழ்நிலையில் பல்வேறு சிரமங்களால் அவதிப்பட்ட அவர்களுக்கு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். அவ்வாறு நடிகை வரலட்சுமியும் சேவ் சக்தி ஃபவுண்டேஷன் மூலமாக பலருக்கும் உதவி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 2,000 புலம்பெயர் தொழிலாளர்கள் சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்குக் கிளம்பினர். அவர்கள் அனைவருக்கும் தேவையான உணவு, தண்ணீர், முகக்கவசம், சாக்லேட்டுகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் என அவர்கள் ஊர் சென்று சேரும் வரை தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் நடிகை வரலட்சுமி அவரது தாய் மற்றும் சேவ் சக்தி ஃபவுண்டேஷனுடன் இணைந்து வழங்கியுள்ளனர்.
அதனை தொடர்ந்து இதுகுறித்து பேசிய நடிகை வரலக்ஷ்மி, இந்த உதவிகள் நல்லபடியாக நடைபெற உதவியாக இருந்த சென்னை காவல் துறை, சென்னை மாநகராட்சி, இந்திய ரயில்வே துறை, இரவு பகல் பாராமல் உழைத்த தன்னார்வலர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் என கூறியுள்ளார்.