காவல்துறையை விசிக பிரமுகர் தரக்குறைவாக பேசிய விவகாரம்.. வழக்கு பதிவானதால் 9 பேர் கைது., 7 ஆதரவாளர்கள் தலைமறைவு.!



VCK Party Arani District Secretary Abuse Words to Police Issue 9 Arrested 

ஆரணி காவல் நிலையம் முன்பு காவல்துறை அதிகாரிகளை கண்ணியமின்றி பேசிய விசிகவினர் கொத்தாக கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். தலைமறைவான விசிக மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்களை பிடிக்க வலைவீசப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் நடந்த நில அபகரிப்பு தொடர்பான விவகாரத்தில், விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆரணி காவல் நிலையத்திற்குள் புகுந்து உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்தார். 

இந்த விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகவே, உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அவரை ஜாமீன் பெற்று வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், நேற்று ஜாமீன் பெற்றதால் காரில் தனது ஆதரவாளர்களோடு ஆரணியில் ஊர்வலம் சென்ற பாஸ்கரன், காவல் துறையினரை அவமதிக்கும் கோஷங்களை எழுப்பினர்.

தமிழ்நாடுவிசிக மாவட்ட செயலாளர் ம.கு பாஸ்கரன்

அதாவது, "காவல் நாயே வெளிய வாடா.. விடியோவா எடுக்குற" என்று சர்ச்சையான வகையில் பாஸ்கர முழக்கமிட்ட, அதனை அவரின் தொண்டர்களும் அப்படியே கூறியிருந்தனர். ஆரணி காவல் நிலையத்திற்கு முன்பு நடந்த இக்கூத்தை காவல் துறையினர் வேடிக்கை பார்த்தவாறு அமைதியாக இருந்தனர். 

இதற்கிடையே, இந்த வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், காவலர்களை அவதூறாக பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதன்படி, ஆரணி காவல் துறையினர் எடுத்த நடவடிக்கையில் விசிகவினர் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் தனிப்படையினரால் தேடப்பட்டு வருகின்றனர்.