"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
தளர்வுகள் இல்லாத ஒரு வார முழு ஊரடங்கு.! எகிறிய அவரைக்காய் விலை கிலோ ரூ.300.!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த மே 10 முதல் 24 வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தீவிரம் அதிகமாக இருப்பதால் மேலும் ஒரு வாரத்துக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ஏதுவாக நேற்றும், இன்றும் இரண்டு நாட்கள் மட்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, காய்கறி விற்பனை முழு வீச்சில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மே 24-ந் தேதி முதல் தளர்வுகள் இல்லாத ஒரு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. ஊராடங்கு காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
பல இடங்களில் ஒருகிலோ அவரைக்காய் ரூ.300க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாக இருந்த விலையை விட 3 மடங்கு விலை உயர்த்தி காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று வரை கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.