#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உணவுப்பிரியர்களே ஜாக்கிரதை : சைவ உணவகத்தில் வாங்கிய உணவில் எலித்தலை..! சாப்பிட அமர்ந்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!
சைவ உணவகத்தில் துக்க நிகழ்விற்கு ஆர்டர் கொடுத்திருந்த நிலையில், பீட்ரூட் பொரியலில் எலித்தலை இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, பழைய பேருந்து நிலையத்தில் பாலாஜி பவன் என்ற சைவ உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகத்தில் ஒரு குடும்பத்தினர் துக்க நிகழ்விற்காக சாப்பாடு ஆர்டர் கொடுத்திருந்தனர். இந்த நிலையில், அந்த ஓட்டலில் இருந்து அனுப்பப்பட்ட சாப்பாட்டில் பீட்ரூட் பொரியலில் எலித்தலை இருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஓட்டலில் முறையிட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் அவர்களை சமரசம் செய்து, அந்த உணவையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்து பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.