பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மகளிர் உரிமைத்தொகை ₹.2000.?! நிர்வாகம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை.!
தமிழகம் முழுவதும் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டமானது கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது.
செப்டம்பர் 15 முதல் இல்லத்தரசிகள் ஒவ்வொரு மாதமும் தங்களது வங்கி கணக்கில் ₹.1000 ரூபாயை பெற்று வருகின்றனர்.
தகுதியுள்ள மகளிருக்கு மட்டும் இந்த உரிமை தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இதில் பல்வேறு தளர்வுகளின் அடிப்படையில் அடுத்தடுத்து தகுதியுள்ளவர்கள் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு வங்கி கணக்கில் உரிமை தொகை ₹.1000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் ஒரே எண்ணில் ஒரே பெயரில் வங்கி கணக்கு வைத்திருந்த இரு பெண்களுக்கு உதவி தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, ஒரே வங்கி கணக்கு இருந்த காரணத்தால் ஒரே பெண்ணிற்கு மட்டும் 2 முறை உரிமைத்தொகை கிடைத்துள்ளது.
அவருக்கு ₹.2000 ரூபாய் மாதம் உரிமை தொகை கிடைத்த நிலையில் மற்றொரு பெண்ணிற்கு பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் கொடுத்ததன் அடிப்படையில் இந்த விஷயம் நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து நிர்வாகம் அந்த பெண்ணிற்கு உரிமை தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.