#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கேப்டன் விஜயகாந்தின் காலில் இவ்வளவு காயங்களா..! வைரலாகும் வீடியோ
நாடு முழுவதும் ஊரடங்கில் இருக்கும் சமயத்தில் கேப்டன் விஜயகாந்திற்கு அவரது மனைவி பிரேமலதா முடிவெட்டி சேவிங் செய்யும் வீடியோவினை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வகையான தொழிற்கூடங்களும் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து வீட்டிலேயே இருந்து வரும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு அவரது மனைவி முடி வெட்டி சேவிங் செய்துள்ளார். மேலும் அவருக்கு டை அடித்து கை மற்றும் கால் நகங்களையும் வெட்டியுள்ளார்.
அப்போது விஜயகாந்தின் கால்களில் உள்ள காயங்களை காட்டிய அவர், "எனது கணவர் படங்களில் நடிக்கும் போது ஏற்பட்ட காயங்களை பாருங்கள். ஒவ்வொரு காயத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது" என கூறியுள்ளார்.
கொரானா வைரஸ் ஊரடங்கு காலத்தில், நான் எனது இல்லத்தில்...! #CORONA | #COVID19 | #lockdown | #Stayhome | #Staysafe pic.twitter.com/y1KGHQgaEK
— Vijayakant (@iVijayakant) April 19, 2020