#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் ரசிகர்கள் மீது காவல் துறையினர் தடியடி; ட்விட்டரில் ட்ரெண்டாகும் #அய்யோஅம்மாஆடியோலாஞ்ச்..!
நடிகர் இளையதளபதி விஜய் நடிப்பில், தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் 14 ஜனவரி 2023 அன்று திரையரங்கில் வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு. தமிழ், தெலுங்கு மொழிகளில் களமிறங்கும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.
இதற்காக தமிழகம், ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களில் உள்ள விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர் மன்றத்தினர் சென்னைக்கு வந்து குவிந்தனர். அனுமதி உள்ளவர்களுக்கு மட்டுமே காவல் துறையினர் அரங்கத்தில் செல்ல அனுமதி வழங்கி வருகின்றனர். சிலர் ஆர்வக்கோளாறில் சுவர் ஏறிக்குதித்தும், இரும்பு கதவை இடித்து தள்ளிச்செல்லவும் முயற்சி செய்தனர்.
ஒருகட்டத்தில் கதவை இடித்து தள்ள ரசிகர்கள் முயற்சி செய்ததால், காவல் துறையினர் விஜய் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்துவிட்டனர். இதனை பிற நடிகர்களின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #அய்யோஅம்மாஆடியோலாஞ்ச் என்ற பெயரில் டேக் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
முதல் பரிசு 😂🤣#Thunivu #AjithKumar #அய்யோஅம்மாஆடியோலாஞ்ச் pic.twitter.com/BZJ7ZeHx3u
— 🇵🇮🇸🇹🇭🇦™ 2.0 (@ajith_simbu0) December 24, 2022