பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#Breaking: விருதுநகர் அருகே, பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 3 பேர் பலி..!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில், இன்று வழக்கம்போல பணியாளர்கள் தங்களின் வேலைகளை கவனித்துக்கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில், பட்டாசு ஆலையில் தீடீரென தீ விபத்து ஏற்பட்டு, பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில், பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், விபத்தில் காயமடைந்தோரை மீட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.