பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பழிக்குப்பழி.. இரத்தத்திற்கு இரத்தம்.. சிவகாசியில் பரபரப்பு சம்பவம்.. 6 பேர் கும்பல் வெறிச்செயல்.!
சுமைதூக்கும் தொழிலாளி 6 பேர் கும்பல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பழிக்குப்பழியாக சம்பவம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சேனையாபுரம் காலனியில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரின் மகன் அரவிந்தன் என்ற பார்த்தீபன் (வயது 27). இவர் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பார்த்தீபன் மற்றும் அவரின் நண்பர் துரைப்பாண்டி (வயது 27) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கள்ளிப்பட்டியில் இருந்து சிவகாசிக்கு வந்துகொண்டு இருந்தார்.
அப்போது, இவர்களை இடைமறித்த கும்பல் அரிவாளால் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில், பார்த்தீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் வெட்டுக்காயத்துடன் அனுமதி செய்யப்பட்ட துரைப்பாண்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் அருண்பாண்டியன், பார்த்தீபன் (இவர் வேறொருவர்), மதன், பழனி செல்வம் உட்பட சிலரின் மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
கொலையான பார்த்தீபனின் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலையில் உள்ள நிலையில், சிவகாசியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நவநீதகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பார்த்தீபன் உட்பட 3 பேரின் மீது அதிகாரிகள் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த பார்த்தீபன், சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது, பார்த்தீபனை கொலை செய்ய திட்டமிட்டவர்கள், வேலை முடிந்து வைத்ததும் தங்களின் திட்டத்தை அரங்கேற்றி கொலையை நிகழ்த்தியுள்ளனர். மேலும், நவநீத கிருஷ்ணனின் கொலை சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக இது நடந்துள்ளது. கொலையாளிகள் தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.