பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
65 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த 32 வயது இளைஞர்.! விருதுநகரில் அதிர்ச்சி சம்பவம்.!!
தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீட்டில் நுழைந்து அத்துமீற முயன்ற இளைஞர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், கூமாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாப்பா (வயது 64). இவரின் கணவர் குருவையா. இவர் கடந்த 5 வருடத்திற்கு முன்னர் இறந்துவிட்டார். தம்பதிகளுக்கு 2 மகள்கள், 1 மகன் இருந்த நிலையில், அனைவரும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இதனால் பாப்பா தனது வீட்டில் தனியே வசித்து வரும் நிலையில், சம்பவத்தன்று அவர் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த மணிகண்டன் (வயது 32) என்பவர், மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பாப்பா கூச்சலிடவே, மணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பாப்பாவை தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார். பாப்பாவின் அபயக்குரல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரிடம் விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் பாப்பாவை வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த கூமாபட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி புகார் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.