#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வார்னரை அசிங்கமாக திட்டிய ரசிகர்கள்! அடுத்தநிமிடமே பதிலடி கொடுத்த வார்னர்! வைரல் வீடியோ!
ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளதால், சமநிலையில் இருந்தது.
இந்தநிலையில் கடந்த 4-ஆம் தேதி துவங்கிய 4-வது டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்தணிக்கே இந்த முறை ஆஷஸ் கோப்பை கிடைக்க வாய்ப்புள்ளதாக முன்னணி வீரர்கள் பலரும் கூறினர்.
#davidwarner #Ashes2019 #ausvseng reaction 😂😂😂😂👌 pic.twitter.com/c3kicg4xH0
— samizyan (@dizismaaz) September 7, 2019
அந்த வகையில் ஆஸ்திரேலிய அணி 185 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்ற முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த நான்காவது போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுடைய அறையில் இருந்து மைதானத்திற்குள் செல்ல கீழே இறங்கியபோது, இங்கிலாந்து ரசிகர்கள் சிலர் தகாத வார்த்தைகளால், ஏமாற்றுக்காரன் என்று கத்தினர்.
ஆனால் வார்னர் இதற்கு கோபப்படாமல், உற்சாகமாக இரண்டு கைகளையும் உயர்த்தி காட்டினார். வார்னர் அவ்வாறு செய்தது, இங்கிலாந்து ரசிகர்களுக்கு மூக்குடைக்கும் வகையில் வார்னர் செய்துவிட்டதாக, அவுஸ்திரேலியா ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.