வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
அடடா என்ன ஆச்சரியம்... அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த மருத்துவர்..!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஹர்ஷிதா என்பவர் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இதனையடுத்து ஹர்ஷிதாவுக்கும் மதுரையை சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் ஹர்ஷிதா கர்ப்பமாகியுள்ளார். மேலும் தான் பணிபுரியும் மருத்துவமனையிலேயே ஹர்ஷிதா தொடர் பரிசோதனை சிகிச்சைகளை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 20 ம் தேதி ஹர்ஷிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஹர்ஷிதா பணிபுரிந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அவருக்கு கடந்த 21ஆம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்றெடுத்த மருத்துவரின் செயலைக் கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.