#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பக்கத்து வீட்டு கல்லூரி மாணவன் மீது மனைவிக்கு காதல்.! கணவனுக்கு தெரியவந்த உண்மை.! இறுதியில் நேர்ந்த பகீர் சம்பவம்.!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரம் பகுதியை சேர்ந்தவர் லியோபால். இவரும் சுஜித்ரா மேரி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சென்னையில் வேலை பார்த்து வந்த அவரது மாமனாருக்கு போன் செய்த சுஜித்ரா மேரி புதுச்சேரியில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற லியோ பாலை காணவில்லை என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சொந்த ஊருக்கு வந்த லியோபாலின் தந்தை சகாயராஜ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இரண்டு குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். இதனையடுத்து குழந்தைகளிடம் விசாரித்தபோது, காலையில் இருந்து அம்மாவை காணவில்லை என தெரிவித்துள்ளனர். வீட்டின் பின்புறம் பள்ளம் தோண்டிய தடயம் இருப்பதை கண்ட சகாயராஜ், போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த தோண்டிய போது தலை மற்றும் கழுத்தில் இரத்த காயங்களுடன் புதைக்கப்பட்டிருந்த லியோ பாலின் சடலம் அழுகி நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ராதாகிருஷ்ணன் என்ற 20 வயது இளைஞனுக்கும், சுஜித்ராவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் தொடர்பை கண்டுபிடித்த லியோபால் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் தனது காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை தீர்த்து கட்ட சுஜித்ரா மேரி முடிவு செய்துள்ளார். இதனையடுத்து கடந்த 4ஆம் தேதி வீட்டில் தூங்கி கொண்டிருந்த லியோபாலை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து சடலத்தை வீட்டுக்கு பின்புறத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர். இந்தநிலையில், சுஜித்ரா மேரி ராதாகிருஷ்ணனுடன் தலைமறைவாகி உள்ளார். இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.