மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவர் அடித்து துன்புறுத்தியதால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த செயல்...
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த அக்கியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமர் - கண்மணி தம்பதியினர். ராமர் சென்னையில் இடியாப்பம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை திருச்சி - மதுரை சாலையில் ராமர் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராமர் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராமரின் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் போலீசாருக்கு புகார் கொடுத்துள்ளனர். அதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ராமரின் உடன் தொழிலாளியான அருள்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது ராமரின் மனைவி கண்மணிக்கும், அருள்குமார் என்பவருக்கு இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமான ராமர் கண்மணியை கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார். உடனே கண்மணி இது குறித்து அருள்குமாரிடம் கூறியுள்ளார்.
அருள்குமார், ராமாரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அருள்குமார் இரும்பு கம்பியால் ராமரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொவைக்கு கண்மணியும் உடந்தையாக இருந்துள்ளார். அதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.