கணவர் உயிரிழந்ததால், சோகத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!
கடலூர் அருகே கணவன் உயிரிழந்ததால், சோகத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள சூரியன்பேட்டையை சேர்ந்த தம்பதியினர் கந்தன் - ராமவள்ளி. இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். அரசு பேருந்து நடத்துனரான கந்தன் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் கந்தன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். அன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இதனால், மனமுடைந்த மனைவி வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் ராமவள்ளியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.