பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தாம்பரம் மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தற்காலிக ஊழியர்கள்.! அதிர்ச்சி பின்னணி.!
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த கூலி வேலை பெண் ஒருவர் நேற்று இரவு பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் எறியுள்ளார். அவர் குடிபோதையில் இருந்ததால் அயர்ந்து தூங்கி உள்ளார். இதனால் அந்த ரயில் செங்கல்பட்டு வரை சென்று மீண்டும் கடற்கரைக்கு வந்து அதன் பின்னர் தாம்பரம் வந்தடைந்துள்ளது.
இதனையடுத்து அந்த ரயில் பராமரிப்பு செய்யும் பணிக்காக தாம்பரம் மின்சார ரயில் பராமரிப்பு நிலையத்திற்கு சென்றுள்ளது. அப்போது நள்ளிரவு ஒருமணியளவில் அங்கு வந்த தற்காலிக ஊழியர்களான சுரேஷ் மற்றும் அப்துல் அஜிஸ் ஆகியஇருவரும் மின்சார ரயிலில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது எனவும் மிரட்டி அனுப்பியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த பெண் தாம்பரம் ரயில்வே காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து சுரேஷ், அப்துல் அஜிஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.