#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கள்ள தொடர்பை கணவன் கண்டித்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை... கோவையில் பரபரப்பு...
கோவை மாவட்டம் காட்டூரில் பெண் ஒருவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அப்பெண்ணின் கணவர் சமையல் வேலை செய்து வந்துள்ளார். அதன் காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இதற்கு இடையில் வாலிபர் ஒருவரோடு அப்பெண்ணிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இவ்விவகாரம் கணவருக்கு தெரிய வரவே மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இருப்பினும் அப்பெண் அந்த வாலிபரோடு உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த கணவர் கள்ளக்காதலை கைவிடுமாறு கடுமையாக கண்டித்துள்ளார்.
ஆனால் மனைவி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அந்த சமயத்தில் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரிய வரவே, அப்பெண்ணின் உடலை கைப்பற்றி அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.