பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குடும்பதகராறில் மின்சார ரெயில் முன்பாய்ந்து இளம்பெண் தற்கொலை...
பெரவள்ளூரை சேர்ந்தவர் நாகராஜன் - ஜோதி சுகன்யா தம்பதியினர். இந்நிலையில் இன்று காலை ஜோதி சுகன்யா வீட்டில் உள்ளவர்களிடம் ஏடிஎம் மில் பணம் எடுத்து வருவதாக கூறி விட்டு வெளியே சென்றுள்ளார்.
இந்த நிலையில் பெரம்பூர் லோகோ ரெயில் நிலையம் அருகே வந்த அவர் திடீரென அரக்கோணத்தில் இருந்த சென்னை நோக்கி வந்த மின்சார ரெயிலில் பாய்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதில் ஜோதி சுகன்யா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியே சென்றவர்கள் இச்சம்பவம் குறித்து பெரம்பூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த ரெயில்வே போலீசார் ஜோதி சுகன்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஜோதி சுகன்யா குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டதில் குடும்ப தகராறில் ஜோதி சுகன்யா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இருப்பினும் ஜோதி சுகன்யா கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.