#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்.. போக்சோவில் கைது.!
மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாத்தாவுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த பால்பாண்டி என்பவரின் தாயார் சிறுமியை பெண் கேட்டுள்ளார். இதில் சிறுமி மைனர் என்பதால் தாத்தா பெண் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனையடுத்து பொங்கல் திருவிழாவிற்கு சிறுமியை பால்பாண்டியின் தாயார் அழைத்துள்ளார். இதனை நம்பி தாத்தா தனது பேத்தியை அனுப்பி வைத்துள்ளார். திருவிழா முடிந்து சொந்த ஊருக்கு வந்த சிறுமி திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்து தாத்தாவிற்கு ஃபோன் செய்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாத்தா சொந்த ஊருக்கு அழைத்து வந்து விசாரித்ததில் பால்பாண்டி திருவிழாவிற்கு அவரது ஊருக்கு சென்றபோது திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து தனது பேத்தியை திருமணம் செய்து கொள்ளும்படி பால்பாண்டியிடம் கூறியுள்ளார். ஆனால் இதற்கு பால்பாண்டி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தாத்தா அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் பால்பாண்டியை கைது செய்தனர்.