பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
குடும்பத் தகராறில் வாலிபர் எடுத்த விபரீதம் முடிவு... நள்ளிரவில் துடி துடிக்க நிகழ்ந்த சோக சம்பவம்!!
சென்னை மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் டேனியல்(23). இவர் வீட்டில் தனது பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு பழைய பெருங்களத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள தனது நண்பர் வீடான மணிகண்டன் என்பவரது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் இரவு 11 மணி வரை குடித்துள்ளனர்.
அப்போது மணிகண்டன், டேனியலுக்கு அறிவுரை கூறி வீட்டிற்கு செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு டேனியல் நான் செத்தாலும் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்று கூறியுள்ளார். மணிகண்டனும் காலையில் பார்த்து கொள்ளலாம் என்று கூறி தூங்க சென்றுள்ளனர்.
திடீரென டேனியல் நள்ளிரவு 11.30 மணியளவில் மணிகண்டனின் வீட்டு முதல் மாடியிலிருந்து அருகே சென்று கொண்டிருந்த தெருவில் உள்ள மின்கம்பியின் மீது குதித்துள்ளார். அதில் மின்கம்பிகளுக்கு இடையே சிக்கி துடிதுடித்து கொண்டிருந்தார் டேனியல். உடனே தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் டேனியலை மீட்டு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதில் டேனியல் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனையடுத்து டேனியலை உடலை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.