#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடியால் வந்த குடும்ப சண்டை; தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக்கொண்ட இளம் பெண்-பண்ருட்டியில் சோகம்..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு காதலித்து ரஞ்சினி (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது குடும்ப வாழ்க்கை ஆரம்பத்தில் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. திடீரென்று வெங்கடேசன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் மெல்ல மெல்ல அவர்களது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது.
தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வெங்கடேசன் ரஞ்சினியிடம் சண்டை போட ஆரம்பித்தார். இதனால் அவர்களுக்குள் சகஜமான குடும்ப சூழ்நிலை நிலவவில்லை. அடிக்கடி ஏற்படும் சண்டையை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இருந்தும் வெங்கடேசன் குடிப்பதை நிறுத்துவதாக தெரியவில்லை. இதனால் மனமுடைந்த ரஞ்சினி,தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளார். அதன்படி ரஞ்சனி நேற்று யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த உறவினர்கள் பண்ருட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த பண்ருட்டி காவல் ஆய்வாளர் சந்திரன் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ரஞ்சினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.