#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலியின் முகத்தில் சானிடைசரை ஊற்றி தீ பற்றவைத்த காதலன்! இதற்காகவா? வெளியான அதிர்ச்சி காரணம்!
சண்டிகர் மாவட்டம் ஷில்லாங்கில் வசித்து வந்தவர் 22 வயது இளம்பெண். அவர் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தான் சண்டிகருக்கு குடிபெயர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் அப்பகுதியில் வசித்து வந்த நரேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த வாரம் நரேஷ் அந்த இளம்பெண்ணிடம் ரூ .2,000 கடனாக கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த பெண் தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி கடன் தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நரேஷ் தன் காதலியின் முகத்தில், சானிடைசரை ஊற்றி லைட்டரை வைத்து நெருப்பு பற்ற வைத்துள்ளார்.
அதில் சானிடைசரில் இருந்த ஆல்கஹாலால் இளம்பெண்ணின் முகம் பற்றி எரிந்துள்ளது. இந்த நிலையில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.