ஐஏஎஸ் அதிகாரி கெட்டப்! லட்சக்கணக்கில் மோசடி செய்து நடிகைகளுடன் உல்லாசம்! அதிரவைக்கும் இளைஞர்களின் பின்னணி!



youngman-cheats-money-for-buying-government-jobs

ராமநாதபுரம் மாவட்டம் புளிக்காரத் தெருவைச் சேர்ந்தவர்கள் தனராஜ் மற்றும் டெய்சி தம்பதியினர். இவர்கள் இருவருமே ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களது மகன் சைமன். இவர் ஆந்திராவில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். 
இந்நிலையில் டெய்சி சென்னையில் சுகாதாரத் துறையில் உதவியாளராக பணிபுரிந்து வரும் ஜார்ஜ் பிலிப்  என்பவருடன் அறிமுகமாகியுள்ளார் 

அவர் தான் அரசுபணியில் இருப்பதால், தனக்கு டிஎன்பிஎஸ்சியில் வேலை பார்த்து வரும் பிரகாஷ் என்பவரை நன்றாக தெரியும். அவர் நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கித் தந்துள்ளார் என கூறியுள்ளார்.  இதனை நம்பிய டெய்சி தனது மருமகன், சகோதரியின் மகன் மற்றும் உறவினர் மூன்று பேருக்கு வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவர் ஒப்புக்கொண்ட நிலையில், வேலைக்கு தலா ஒரு லட்சம் வீதம் மூன்று பேருக்கும் 15 லட்சம் வேண்டுமென கேட்டுள்ளார். அவர்கள் அதற்கு ஒப்புக் கொண்டநிலையில் சமீபத்தில்  பணம் மற்றும் கல்விச் சான்றிதழ்களை தயாராக வைத்துகொண்டு ஜார்ஜ் மற்றும் பிரகாஷ் என்ற நவாப்பனை சந்திக்க தயாராக இருந்துள்ளனர்.

government job

இந்நிலையில் அரசு அதிகாரிகள் போல சுழல்விளக்கு ஜீப்பில் வந்து இறங்கிய அவர்களிடம் பேசி டெய்சி பணத்தை கொடுத்துள்ளார். பின்னர் பணி நியமனஆணை குறித்து கேட்ட நிலையில் அவர்கள் எந்த பதிலும் அளிக்காமல் ஜூப்பில் வேகமாக மாயமானர்.

இதனால் அதிர்ச்சியடைந்த டெய்சி இதுகுறித்து உடனே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதலுக்கு பிறகு இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது நாவப்பன் செங்கம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவர் ஐஏஎஸ் அதிகாரி போல வேடமிட்டு பலரை ஏமாற்றியதும் தெரிய வந்தது.

 மேலும் இவர்கள் இத்தகைய மோசடி பணத்தை வைத்து, தாங்கள் படம் எடுக்கப்போவதாக கூறி பல துணை நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகளை ஏமாற்றி அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர்.இத்தகைய புகைப்படங்கள் அனைத்தும் அவர்களது செல்போனில் இருந்து கைப்பற்றப்பட்டது.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.