#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாட்சப்பை பாதுகாக்க அறிமுகமாகிறது புதிய வசதி! இனி அந்த கவலையே வேண்டாம்
உலகம் முழுவதும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸாப் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வாட்சப்பை மற்றவர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக புதிய பாதுகாப்பு வசதியை வாட்சப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மொபைல் போன்களை மற்றவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக ஸ்கிரீன் லாக், பயோமெட்ரிக் லாக் என பல்வேறு வசதிகள் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் இருந்து வருகிறது. ஆனால் மொபைலில் உள்ள ஒவ்வொரு ஆப்களையும் பிரத்தியேகமாக லாக் செய்வதற்கென்று ஒரு சில மூன்றாம் தர லாக் ஆப்புகளை தான் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மொபைல் போன்களை லாக் செய்ய பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் லாக், பயோமெட்ரிக் லாக் போன்ற வசதியை பிரத்தியேகமாக வாட்சப்பிற்கும் பயன்படுத்தும் புதிய அப்டேட்டை வாட்ஸ்ஆப் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதன் மூலம் ஒருவர் தன்னுடைய வாட்சப் பினை திறப்பதற்கு மொபைல் ஸ்க்ரீன் லாக் கடவுச்சொல் அல்லது பிங்கர் பிரிண்ட் போன்றவை மூலம் அன்லாக் செய்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை திறக்க முடியும். இதனை ஒருவர் தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பையும் வாட்சப் அளித்துள்ளது.
இந்த வசதியை ஒருவர் பயன்படுத்த வாட்ஸ் அப்பில் செட்டிங்ஸ் மெனுவிற்கு சென்று அக்கவுண்ட் ஆப்ஷனை தேர்வு செய்து மேலும் அதிலுள்ள பிரைவசி என்னும் ஆப்ஷனை திறக்க வேண்டும். அங்கு அவர்களுக்கு ஸ்க்ரீன் லாக் என்னும் ஆப்ஷன் காண்பிக்கப்படும். அதனை தெரிவு செய்யும் பட்சத்தில் உங்களுடைய வாட்ஸப் லாக் ஆனது மொபைல் லாக் உடன் இணைக்கப்படும். இதன்மூலம் ஒவ்வொரு முறை வாட்ஸ் அப்பை திறக்கும்போதும் மீண்டும் மொபைலை அன்லாக் செய்வது போன்ற செயலை செய்ய வேண்டும்.
இந்த வசதியானது தற்பொழுது ஆப்பிள் ஐபோன் பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கூடிய விரைவில் இந்த வசதியானது ஆண்ட்ராய்ட் மொபைல் பயனாளர்களுக்கும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.