பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
boAT ஹெட் போன், ஏர் பாட்ஸ் பயன்படுத்துறீங்களா.? உங்க பிரைவசிக்கு ஆபத்து.! வெளியான அதிர்ச்சி தகவல்.!
போட் எலக்ட்ரானிக் நிறுவனம் ஹெட் போன்ஸ் ஏர் பாட்ஸ் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் லைப் ஸ்டைல் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்திற்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது. இந்நிலையில் போட் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கி இருந்தால் உங்களது தனிப்பட்ட விவரங்கள் டார்க் வெப்பில் வெளியாகி இருக்கலாம் என அதிர்ச்சியான அறிக்கையை ஃபோர்ப்ஸ் இந்தியா இணையதளம் வெளியிட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் அறிக்கையின்படி போட் நிறுவனம் மிகப்பெரிய சைபர் தாக்குதலை சந்தித்து இருக்கிறது. அந்த நிறுவனத்தை குறி வைத்து ஹேக்கர்கள் நடத்திய சைபர் தாக்குதல் மூலம் 75 லட்சம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் பெயர் அவர்களது முகவரி செல்போன் எண்கள் கஸ்டமர் ஐடி இமெயில் ஐடி போன்ற தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவல்கள் டார்க் வெப் என்றழைக்கப்படும் இணையதளத்தின் இருண்ட பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது. ஷாபிஃபைகை என்ற ஹேக்கர் ஏப்ரல் 5-ஆம் தேதி போட் நிறுவனத்தின் இணையதளத்தை குறி வைத்து நடத்திய தாக்குதலின் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் அடங்கிய 2 ஜிபி டேட்டாவை திருடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட் நிறுவன தயாரிப்புகளை தற்போது வாங்கியவர்கள் மற்றும் பல ஆண்டுகளுக்கு முன்னாள் வாங்கிய வாடிக்கையாளர்கள் என அனைவரது தகவல்களும் திருடப்பட்டு டார்க் வெப் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இவற்றில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு கிரெடிட் கார்ட் போன்ற தகவல்களும் இடம் பெற்றுள்ளது. இதனால் போட் நிறுவனத்தின் தயாரிப்புகளை வாங்கிய வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிற்கும் ஆபத்து ஏற்படலாம் என தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.