35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
ஆபத்து! வாட்சப் பயன்படுத்துறீங்களா? அப்போ உடனே இதை செய்ங்க!
செய்திகள், வீடீயோக்கள், புகைப்படங்களை மற்றவர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்துகொள்ள வாட்சப் பயன்படுகிறது. Facebook நிறுவனம் வாட்ஸப்பை கைப்பற்றியதில் இருந்து புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.
குறிப்பாக போலியான செய்திகளை கண்டறிய, அதன் மூலம் வரும் அசம்பாவிதங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது வாட்சப் நிறுவனம். இந்தியா மட்டும் இல்லாது உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் வாட்ஸப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வாட்ஸப்பில் சில கேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட எண்களுக்கு வாட்சப் கால் செய்யும் கேக்கர்கள் அதன்மூலம் உங்கள் தொலைபேசியை கண்காணிக்கும் செயலியை தொலைபேசியில் பதிவிறக்கம் செய்கின்றனர்.
இதன்மூலம் உங்கள் நடவடிக்கைகளை கேக்கர்களால் கண்காணிக்க முடியும். இதனை தடுக்க உங்கள் வாட்ஸப்பை உடனே அப்டேட் செய்யுமாறு வாட்சப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புது அப்டேட்டானது உங்களை கேக்கர்களிடம் இருந்து காக்கும் புது அம்சம் கொண்டதாக வடிவமைக்கப்ட்டுள்ளதாக வாட்சப் தெரிவித்துள்ளது.