#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மொபைல் தொலைந்து விட்டால் வாட்ஸ்அப் அக்கவுண்டை பாதுகாப்பது எப்படி! பயனுள்ள டிப்ஸ்
உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்டால் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டை எப்படி பாதுகாப்பது, அதிலுள்ள தகவல்களை மீண்டும் எப்படி பெறுவது என்பதை பற்றி ஒரு பயனுள்ள தகவல்.
நம்முடைய மொபைல் போனில் ஒரு எண்ணிற்கான வாட்ஸாப் அக்கவுண்டை உருவாக்கிய பிறகு, அந்த எண்ணின் சிம் கார்டினை மொபைலில் இருந்து நீக்கினாலும் அந்த வாட்ஸ் அப் அக்கவுன்ட் தொடர்ந்து உபயோகத்தில் இருப்பதை நாம் பார்த்திருக்கலாம். அந்த வாட்ஸாப் அக்கவுண்ட் ஆனது wi-fi மூலமாகவோ அல்லது வேறொரு சிம்கார்டின் இணையதள வசதியின் மூலமாகவும் தொடர்ந்து உபயோகத்தில் இருக்கும்.
நாம் அந்த எண்ணிற்கான சிம் கார்டினை வேறொரு மொபைலில் செலுத்தி அதற்கான வாட்ஸாப் அக்கவுண்டினை புதிய மொபைலில் உருவாக்கும் வரை பழைய மொபைலில் இருக்கும் வாட்ஸாப் அக்கௌன்ட் பயன்பாட்டில் இருக்கும். இந்த வசதியானது நாம் புதிய மொபைல் போன்களை மாற்றும் பொழுது நமக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது.
ஆனால் இதே வசதியானது மொபைல் போன்களை தொலைத்து விடும் பொழுது நமக்கு பிரச்சனையாக இருந்துவிடுகிறது. நமது மொபைல் வேறு யாரிடமாவது சிக்கும் பட்சத்தில் அவர்கள் நம்முடைய வாட்ஸாப் அக்கவுண்டினை எளிதில் உபயோகிக்கவும், அதிலுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம். இதனை நாம் எப்படி சமாளிப்பது நம்முடைய வாட்ஸாப் அக்கௌன்ட்-ஐ எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்பதை பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
இதற்கு முதல் வேலையாக நம்முடைய மொபைல் போன் தொலைந்தவுடன் உடனடியாக நம்முடைய நெட்வொர்க் ஆப்பரேட்டர்களை தொடர்புகொண்டு நம்முடைய சிம் கார்டினை லாக் செய்யுமாறு கோரிக்கை விடுக்க வேண்டும். இதன்மூலம் நமது தொலைந்துபோன மொபைலில் உள்ள வாட்ஸாப் அக்கௌன்ட் செயல்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்படும். பின்னர் அதே எண்ணிற்கான புதிய சிம் கார்டினை பெற்று வேறு மொபைலில் நம்முடைய பழைய வாட்ஸாப் அக்கவுண்டினை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். இதன் மூலம் நம்முடைய பழைய தகவல்களையும் புதிய மொபைலில் பெற்றுக்கொள்ள முடியும்.
ஒருவேளை உங்களால் அதே எண்ணிற்கான புதிய சிம் கார்டு பெற முடியவில்லை எனில் நீங்கள் வாட்ஸ் அப்பிற்கு ஒரு இமெயில் அனுப்ப வேண்டும். அதில், “Lost/Stolen: Please deactivate my account +91XXXXXXXXXX ” என subject-ல் குறிப்பிட்டு இமெயில் அனுப்ப வேண்டும். X இருக்கும் இடத்தில உங்களது வாட்ஸாப் எண்ணை குறிப்பிட வேண்டும்.
இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் அக்கௌன்ட் டீஆக்டிவேட் செய்த பிறகும் அடுத்த 30 நாட்களுக்கு உங்களின் நண்பர்கள் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் செய்திகளை அனுப்ப முடியும். அந்த 30 நாட்களுக்குள் நீங்கள் புதிய சிம்கார்டு பெறும் பட்சத்தில் அந்த செய்திகளை நீங்கள் படிக்கலாம். ஒருவேளை 30 நாட்களுக்குள் அதே எண்ணில் சிம் கார்டு பெற முடியவில்லை எனில் உங்களுடைய வாட்ஸப் அக்கௌன்ட் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிடும்.