நிலவு ஆராய்ச்சிக்கு ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய செயற்கைகோள்; சீறிப்பாய்ந்த அதிரடி காட்சிகள் உள்ளே.!



Space X Liftoff IM 1 Mission Successfully 

 

எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சார்பில், இன்று IM-1 எனப்படும் செயற்கைகோள் நிலவு தொடர்பான ஆராய்ச்சிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 

இந்திய நேரப்படி இன்று காலை 11:35 மணியளவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து செயற்கைகோள் விண்ணில் பாய்ந்தது. 

நிலவின் தென்துருவத்தில் உள்ள மாலபெர்ட் ஏ பள்ளத்தில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தி ஆய்வு செய்வதற்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள IM-1 செயற்கைகோள், நாசாவின் 5 விண்வெளி கருவிகளையும் சுமந்து சென்றுள்ளது. 

செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டதற்கான காட்சிகளை ஸ்பேஸ் எக்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறது. கடந்த 1972 ம் ஆண்டுக்கு பின்னர் அமெரிக்கா நிலவு ஆராய்ச்சிக்காக செயற்கைகோள் அனுப்பி இருக்கிறது. 

விண்வெளியில் பல புரியாத மர்மங்களை பல கிரகங்கள் சென்று ஆராய்ச்சி செய்து வரும் நாசா, சூரியனுக்கும் அப்பால் உள்ள கிரகங்களையும், பால்வழி அண்டத்தையும் கண்டறிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.