#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனா நேரத்தில் வாட்சாப்பின் புதிய அப்டேட்! காத்திருக்கும் பயனாளர்கள்!
வாட்ஸ் ஆப் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோ கால் பேச வழிவகுக்கும் வகையில் புதிய அம்சத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைவரும் வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர். இந்தநிலையில் தற்போது ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது சமூகவலைத்தளங்களில் தான் என்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. பலருக்கும் தற்போது பொழுதுபோக்காக இருப்பது முகநூல், வாட்ஸாப் தான்.
வாட்ஸ் ஆப் செயலியை முகநூல் நிறுவனம் வாங்கியதிலிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. கொரோனாவால் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஊழியர்கள், அலுவலக ஆலோசனை மற்றும் அலுவலகம் சார்ந்த விபரங்களை வீடியோ கான்பிரன்சிங் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த சூழலில் வாட்ஸ் ஆப் ஒரே நேரத்தில் 4 பேருக்கு மேல் வீடியோ கால் பேச வழிவகுக்கும் வகையில் புதிய அம்சத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வரை வாட்ஸ் ஆப் வீடியோ காலில் 4 பேர் மட்டுமே இணைந்து பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.