பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
அடிதூள்.. அரசு ஆவணங்களை இனி வாட்ஸ்அப்பில் டவுன்லோட் செய்யலாம்..! எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!
தொழில்நுட்பங்கள் வளர வளர அரசும் பல அமைப்புகளை தொடர்ந்து அதற்கு ஏற்ப பரிமாற்றம் செய்து வருகிறது. அரசின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், எழுத்துப்பூர்வமாக இருக்கும் ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் வடிவத்தில் ஒரு சில ஆவணங்கள் கட்டாயம் தேவைப்படும் இடங்களும் இருக்கின்றன. இந்த நிலையில் வாட்ஸ்அப் மூலமாக அரசின் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து மொபைலில் சேமித்துக் கொள்ளும் வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. நாம் டிஜிட்டல் லாக்கர் என்ற கணக்கு வைத்திருக்கும் பட்சத்தில் நமது டிஜிட்டல் லாக்கர் கணக்கு மூலமாக அதனை செயல்படுத்திக் கொள்ளலாம்.
டிஜிட்டல் லாக்கர் இல்லாத செயலி அல்லது பயனர்களுக்கு இந்த வாய்ப்பு கிடையாது. அவர்கள் புதிதாக டிஜிட்டல் லாக்கர் கணக்கை உருவாக்கி பின்னர் மத்திய அரசின் "Mygov helpdesk" என்பதை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலமாக அதனை பெற்றுக் கொள்ளலாம்.
டிஜிட்டல் லாக்கர் உருவாக்கும் முறை :
★முதலில் +91 9013151515 என்ற MyGov Helpdesk-இன் எண்ணிற்கு HY என மெசேஜ் செய்ய வேண்டும்.
★பின்னர் டிஜிட்டல் லாக்கர் சேவை வாட்ஸ் அப் ஆகியவை திரையில் தோன்றும். அதில் டிஜிட்டல் லாக்கர் கணக்கை கிளிக் செய்து நமது ஆதார் எண்ணை பதிவு செய்து OTP மூலமாக உள்நுழைய வேண்டும்.
★பின்னர் அதில் தோன்றும் chartboard-ல் பதிவிறக்கம் செய்ய விரும்பும் ஆவணத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது பிடிஎப் மூலமாக நமக்கு கிடைக்கும்.