#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இதுவரை இல்லாத புது வசதியை அறிமுகம் செய்கிறது வாட்சப்! உடனே பாருங்க!
சாதாரண மனிதன் தொடங்கி technology ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது whatsapp தான். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.
அதுமட்டும் இல்லாமல் புகைப்படம், வீடியோ, பைல்கள் என அனைத்தையும் எளிதாக மற்றவர்களுடன் பகிர வாட்சப் வழிவகுக்கிறது. என்னதான் வாட்சப் மக்களுக்கு பயனுள்ள செயலியாக இருந்தாலும், அதுவே சில சமயங்களில் எமானாகவும் மாறிவிடுகிறது.
இதுபோன்ற பிரச்சனைகளை சரி செய்ய வாட்சப் நிறுவனம் அவ்வப்போது புது புது விதிமுறைகளை வழங்கி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு பார்வேர்ட் செய்யப்படும் செய்திகளின் குறைத்தது வாட்சப்.
தற்போது வாட்சப் பயனாளர்களுக்கு பயனுள்ள வகையில் புது அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது வாட்சப். அதாவது வாட்ஸப்பில் வரும் புகைப்படங்கள் அனைத்தும் நீங்கள் பதிவிறக்கம் செய்தபிறகு மீடியா என்ற போல்டருக்குள் சென்றுவிடும். சில நாட்கள் கழித்து மீடியாவில் சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்த புகைப்படங்களை பார்க்கும்போது அந்த புகைப்படம் எப்போது அனுப்பப்பட்டது என்ற தகவல் நமக்கு தெரியாது.
தற்போது அதற்கு புது வழிமுறையை வழங்க உள்ளது வாட்சப். வாட்ஸப்பில் யாருடைய மீடியாவை பார்க்க வேண்டுமோ அவர்களது ப்ரொபைல் சென்று மேல உள்ள அவர்களது பெயரை க்ளிக் செய்து அவர்களது ப்ரோபையில் செல்லவேண்டும்.
பின்னர் மீடியாவில் உள்ள எந்த புகைப்படத்திற்கான தேதியை பார்க்க வேண்டுமோ அந்த புகைப்படத்தை க்ளிக் செய்ய வேண்டும். புகைப்படம் ஓபன் ஆன பிறகு வலதுபுறத்தில் மேலே உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்யவேண்டும். அதில் Show in Chat என்ற புதிய ஆப்சன் சேர்க்கப்பட்டிற்கும். புது ஆப்ஷனை கிளிக் செய்த உடனே அந்த புகைப்படம் அனுப்பப்பட்ட தேதி மற்றும் குறிப்பிப்ட்ட Chat உங்களுக்கு காட்டப்படும். இந்த புதிய சேவை விரைவில் வரவுள்ளதாக வாட்சப் நிறுவனம் தெரிவித்துள்ளது.