#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#WhatsApp: நீங்கள் WhatsApp பயன்படுத்துகிறீர்களா?.. அப்போ இது உங்களுக்கு தான்..! அசத்தலான புதிய அப்டேட்.!
இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் தான் அதிகம். ஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ் அப்பில் அவ்வப்போது நிறைய அப்டேட்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இதன் அடிப்படையில் தற்பொழுது புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் நமக்கு அளித்திருக்கிறது. நாம் தினமும் வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாகவோ அல்லது நம்முடைய நண்பர்கள், உறவினர்கள், போன்றவர்களுக்கு மெசேஜ் அனுப்பும்போது, தவறுதலாக வேறு நபருக்கு சென்று விட்டால், அதை நாம் Delete Everyone என்று கொடுத்தால் அது டெலிட் ஆகிவிடும்.
ஆனால் நாம் பதற்றத்தில் Delete Everyone கொடுப்பதற்கு பதிலாக Delete For Me என கொடுத்து விடுவோம். நாம் அனுப்பிய மெசேஜை நமக்கு மட்டும் தான் தெரியாமல் இருக்கும். நாம் யாருக்கு டெலிட் செய்ய கொடுத்தோமே அவருக்கு அது நன்றாக தெரியும். அதை அவர் படிக்கவும் செய்யலாம்.
இதை சரி செய்ய WhatsApp-ல் தற்பொழுது புதிய அப்டேட் வந்துள்ளது. அது என்னவென்றால் நாம் Delete for Me கொடுத்ததை Undo கொடுத்து திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அதனை நாம் திரும்ப Delete For Everyone கொடுத்துக் கொள்ளலாம். Delete For Me மெசேஜ் ஐந்து நிமிடம் Undo ஆப்ஷனில் இருக்கும்.
ஐந்து நொடிகளுக்குள் நாம் Undo கொடுத்து விட்டால், கொடுத்த Delete Message திரும்ப வந்துவிடும். இந்த வசதி தற்சமயம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் வைத்திருப்பவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் உள்ளது.