#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ட்ரிக்ஸ்! வாட்ஸப்பில் உங்களை பிளாக் செய்தவருடன் உரையாடுவது எப்படி? ஈஸியான வழி!
எளிதாக செய்திகளை பரிமாறிக்கொள்ள மிகவும் பயனள்ளதாக உள்ள செயலி வாட்சப். Facebook நிறுவனம் வாட்ஸப்பை கைப்பற்றி தன்வசம் வைத்துள்ளது. மேலும் புது புது வசதிகளை அவ்வப்போது அறிமுகம் செய்து பயனாளர்களை மகிழ்வித்து வருகிறது வாட்சப்.
முன்பெல்லாம் SMS அனுப்புவதற்காகவே தனியாக ரீசார்ஜ் செய்யவேண்டி இருந்தது. இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் காதலிப்பவர்கள்தான். தற்போது வாட்சப் மூலம் செய்தி, வீடியோ, புகைப்படம் என அனைத்தையும் எளிதாக அனுப்ப வாட்சப் பயனுள்ளதாக உள்ளது.
வாட்ஸப்பில் உங்கள் காதலர், அல்லது நண்பர்களுடன் உரையாற்றும்போது எதிரே இருப்பவர் உங்களை Block செய்துவிட்டால் அதன்பின்னர் உங்களால் அவரை வாட்சப் மூலம் தொடர்புகொள்ள முடியாது. அவரே உங்களை Unblock செய்தால் மட்டுமே மீண்டும் உங்களால் அவருடன் உரையாற்ற முடியும்.
இதுபோன்று உங்களை யாரவது பிளாக் செய்துவிட்டால் அவருடன் உரையாற்ற எளிதான வழி ஓன்று உள்ளது. உங்களை பிளாக் செய்தவரும், நீங்களும் ஏதாவது ஒரு வாட்சப் குரூப்பில் இருக்கும் படச்சத்தில் நீங்கள் அந்த நபருடன் உரையாற்ற முடியும்.
நீங்கள் இருவரும் எந்த குரூப்பிலும் இல்லை என்றால் புதிதாக ஒரு குரூப்பை உருவாக்குங்கள். அதில் உங்கள் நண்பர் ஒருவரை அட்மின் ஆகுங்கள். அவரிடம் சொல்லி உங்களை பிளாக் செய்த நபரை அந்த குரூப்பில் சேர்க்க சொல்லுங்கள். அவர் அந்த குரூப்பில் சேர்ந்ததும் உங்கள் நண்பரை அந்த குரூப்பை விட்டு வெளியேற சொல்லுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களை பிளாக் செய்த நபருடன் நீங்கள் உரையாற்ற முடியும்.