தேர்தல் நேரத்தில் வாட்ஸப்பில் இதனை செய்து மாட்டிக்கொள்ளவேண்டாம்! இதிலிருந்து தப்பிப்பது எப்படி?



Whatsapp update

 

சாதாரண மனிதன் தொடங்கி டெக்னாலஜி ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது வாட்சப் தான். உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 1.5 பில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் வாட்ஸாப்பினை பயன்படுத்தி வருகின்றனர். 

பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு  தினம் தினம் புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள சேவைகளில் உள்ள குறைகளை பூர்த்தி செய்து வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சுலபமாக பயன்படுத்தும் மாற்றங்களை செய்து வருகிறது.

இந்தநிலையில், வருகின்ற மக்களவை தேர்தலையடுத்து ஏராளமான  பொய் செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, வாட்ஸப்பில் பொய்ச்செய்திகளை கண்டறிவதற்கான வசதி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

Whatsapp

இதனையடுத்து, வாட்ஸப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு வரும் சந்தேகத்துக்கிடமான ஒரு செய்தி உண்மையா என்று அறிய புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘செக்பாயிண்ட் டிப்லைன்’ தொழில்நுட்பத்துக்கு அந்த செய்தியை 9643000888 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

அதனை உண்மையா என்று சரிபார்க்கும் மையம், அச்செய்தியை சரிபார்த்து, அது உண்மையானதா? பொய்யானதா? இல்லை சர்ச்சைக்குரியதா? என்ற தகவலை வாடிக்கையாளருக்கு தெரிவிக்கும். படங்கள், வீடியோ லிங்க், எழுத்து வடிவம் என பலவகையான செய்திகளை இந்த மையம் ஆய்வு செய்து உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு ரிப்லை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.