உங்க குழந்தைக்கு இந்த இருமல் சிரப் கொடுக்குறீங்களா?.. நச்சுப்பொருளால் 18 குழந்தைகள் பரிதாப பலி.. பெற்றோர்களே உஷார்..!!



18 babies are dead by cough syrup

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழந்துவிட்டதாக உஸ்பெகிஸ்தான் நாட்டு அரசு குற்றசாட்டை முன்வைத்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் Marion Biotech நிறுவனம் தயார் செய்த Doc1Max இருமல் சிரப் குடித்த உஸ்பெகிஸ்தான் நாட்டு 18 சிறார்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் நடந்த ஆய்வில், Doc1Max மருந்தில் Ethylene Glycol என்ற நச்சு பொருள் இருப்பது உறுதியானது.

Cough syrup

Marion Biotech நிறுவனத்தின் மருந்து குறித்து ஆய்வு செய்ய ஐ.நா சுகாதார அமைப்பு தனது குழுவை உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. தற்போது வரை மருந்தை குழந்தைகளுக்கு அனுமதியதாக 7 அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

Cough syrup

இந்நிறுவனத்தின் மருந்து & மாத்திரைகள் நைஜீரியா, ஜியார்ஜியா, United Kingdom, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கென்யா, எத்தியோப்பியா, ஸ்ரீலங்கா, வியட்நாம், மியான்மர் உட்பட பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், அந்நாடுகளில் மேற்கூறிய மருந்தை உபயோகம் செய்யும் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.