#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடீரென மாயமான கணவரின் முதல்மனைவி மகன்! கதறிகொண்டே புகாரளித்த 2 வது மனைவி! சிசிடிவியில் அம்பலமான அதிர்ச்சி காட்சி!
தெற்கு கரோலினா பகுதியில் வசித்து வந்தவர் லிடிசியா ஸ்டவுச். இவரது கணவரின் முதல்மனைவிக்கு 11 வயதில் கன்னான் என்ற மகன் உள்ளான். இந்நிலையியல் லிடிசியா கணவரின் முதல் மனைவியாக இருந்தாலும், அவரே அந்த சிறுவனை வளர்த்து வந்துள்ளார். மேலும் அவன் மீது அளவுக்கு அதிகமான பாசமும் வைத்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் கன்னான் திடீரென காணாமல் போயுள்ளார்.
இதனை தொடர்ந்து லிடிசியா தனது மகனை காணவில்லை என பதற்றத்துடன் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் என் மகன் கன்னானை நான் ஒருநாளும் எந்த வகையிலும் துன்புறுத்தியது கிடையாது, அவன் காணாமல் போனதற்கும் எனக்கும் எந்தவித சம்மந்தம் கிடையாது. அவனை விரைவில் கண்டுபிடித்து தாருங்கள் என அழுது கொண்டே கூறியுள்ளார்.
இந்நிலையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் லிடிசியா வீட்டு வாசலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் லிடிசியாவும்,சிறுவன் கன்னானும் ஒன்றாக காரில் ஏறி சென்றுள்ளனர், பின்னர் சில மணி நேரத்தில் லிடிசியா மட்டும் தனியாக வீட்டுக்கு காரில் திரும்பியுள்ளார் என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து லிடிசியாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்தான் கன்னானை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ஆனால் இதற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை. தற்போது கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு பின்னரே இது தொடர்பிலான முழுமையான தகவல் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.