#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமைய.. என்ன இது?..! பெண்ணின் கண்களில் இருந்து உயிருடன் எடுக்கப்பட்ட 60 புழுக்கள்..! செல்லப்பிராணியிடம் கொஞ்சுவோர் உஷார்.!
சீனாவில் உள்ள குன்மிங் மாகாணத்தை சேர்ந்த பெண்மணி, கங்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுவதாக அங்குள்ள கண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு பெண்மணிக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், பெண்ணின் கண்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பாகங்களில் புழுக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, பெண்ணுக்கு சிகிச்சை செய்தபோது, 60 புழுக்கள் உயிருடன் எடுக்கப்பட்டன. ஒட்டுண்ணியாக வாழும் வட்டப்புழுவின் தாக்குதலுக்கு பெண் உள்ளாகியதால், அவரின் கண்களில் புழுக்கள் வாழ்ந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள், பெண்மணி தன்னை சுற்றி இருந்த செல்லப்பிராணியிடம் சகஜமாக பழகி இருக்கலாம். இதனால் அவைகளிடம் இருந்து பெண்ணுக்கு ஒட்டுண்ணி பரவி புழுக்கள் வளர்ந்து இருக்கலாம் என தெரிவித்தனர்.