மூக்கின் வழியே சென்று மூளையை தின்னும் அமீபாவின் கொடூரத் தாக்குதலுக்கு 17 வயது சிறுமி பலி.!



a-17-year-old-girl-died-after-being-attacked-by-an-amoe

அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது சிறுமியை நெக்லேரியோ ஃபோலேரி  அமீபா தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நெக்லேரியோ ஃபோலேரி என்பது  மிதமான வெப்ப நிலை கொண்ட குளங்கள்  நன்னீர் குட்டைகள் மற்றும் ஏரிகளில் வாழக்கூடிய ஒரு வகை அமீபாவாகும். இது பாக்டீரியாக்களை தாக்கி அளிக்கும் வல்லமை கொண்டதோடு நீர் நிலைகளில் நீந்தி குளிக்கும் மனிதர்களின் மூக்கின் வழியாக சென்று மூளையை சேதப்படுத்தி மரணத்தை ஏற்படுத்தக் கூடியது.

worldஇந்த அரிய வகை அமீபாவின் தாக்குதலுக்கு அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மேகன் எபென்ரோத் என்பவர் மரணம் அடைந்திருக்கிறார். இவர் கடந்த மாதம்  பதினொன்றாம் தேதி தனது தோழிகளுடன் சென்று அருகில் உள்ள குளத்தில் நீந்தி இருக்கிறார். அப்போது இந்த அமீபாவின் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்.

worldகுளத்தில் குளித்ததில் இருந்து நான்கு நாட்கள் கழித்து அவருக்கு கடுமையான தலைவலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த ஜூலை 21ஆம் தேதி அவருக்கு  நிக்லேரியோ ஃபோலேரி  அமீபா தாக்குதல் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஜூலை 22ஆம் தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 1962 ஆம் ஆண்டு முதல் 2023  வரை இந்த அமீபா தொற்று ஏற்பட்ட 150 பேரில் 5 பேர் மட்டுமே உயிர்பிழைத்துள்ளனர் என்பது அதிர்ச்சி அளிக்கும் உண்மையாக இருக்கிறது.