கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம்பெண்! பெற்றோர்கள் செய்த காரியத்தால் குவியும் பாராட்டுக்கள்!



accident dead young girl orphans donate

இந்தியா ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சரிதா ரெட்டி.  25 வயது நிறைந்த அவர் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சரிதா தனது நண்பர்களுடன் மிச்சிகனில் உள்ள மெஸ்ஸி ஹெல்த் ஹேக்லி வளாகத்தின் அருகே காரில் சென்றுகொண்டு இருந்துள்ளார். 

அப்பொழுது ஓட்டுநர் மது போதையில் இருக்க, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த மற்றொரு கார் சரிதா சென்ற காரின் மீது பயங்கரமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் கார் அடையாளமே தெரியாத அளவிற்கு நொறுங்கியது. மேலும் காரில் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். 

orphan donate

பின்னர் அவர்கள் அவசரஅவசரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சரிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்நிலையில் சரிதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக அவர்கள் பெற்றோர்கள் தெரிவித்த நிலையில், சரிதாவின் சாத்தியமான 9 உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனை அவரது சகோதரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.