விமானத்தில் பயணிகளை கவர பணிப்பெண் பாடிய ராப் பாடல்; வைரலாகும் வீடியோ.!



airporce-women---rab-song---america--las-anjels

விமானத்தில் பயணித்த அனுபவம் பலருக்கு இருக்கலாம் சிலருக்கு இல்லாமலும் இருக்கலாம். விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் பணிபுரியும் பணிப்பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து அறிவிப்பை வெளியிடுவார். 

அந்த அறிவிப்பு எப்படியும் தமிழ் மொழியில் இருக்காது அதனால் நம்மவர்கள் பல பேர் அதை காதில் வாங்கிக் கொள்வதில்லை. ஆங்கிலம் தெரிந்தாலும் அதற்கு செவிசாய்க்காமல் அவரவர் பணிகளில் பிசியாகி ஏதாவது ஒன்றை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் பணிப்பெண் அவருடைய கடமையை நிறைவேற்றி விட்டு தான் செல்வார்.

இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து உத்தா வரை சென்ற சவுத்வெஸ்ட் விமானத்தில் பயணிகளின் கவனத்தை ஈர்க்க பணிப்பெண் வித்தியாசமான ஒரு முயற்சியை மேற்கொண்டார். அதாவது விமானத்தில் அவர் பாதுகாப்பு அறிவிப்பை வெளியிடும் போது அதை ராப் பாடலாக பாடினார். ராப் பாடல் ஒலிக்க துவங்கியதும் தங்களது கவனத்தை விமானப்பணிப்பெண் பக்கம் திருப்பிய பயணிகள் அவரது பாடலுக்கு ஏற்பட கைகளை தட்ட துவங்கினர்.