13 வயது சிறுவனின் உயிரை பறித்த காய்ச்சல் சிரப் குடிக்கும் சேலஞ்; பெற்றோர்களே உங்களின் பிள்ளைகளை கவனியுங்க..!



AMERICA OHIO CHILD DIED BENADRYL CHALLENGE

 

டிக் டாக் சேலஞ்ச் செய்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ நகரை சேர்ந்த சிறுவன் ஜேக்கப் ஸ்டீவன்ஸ் (வயது 13). இந்த சிறுவன் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறான். சிறுவன் தனது ஸ்மார்ட்போனில் டிக் டாக் செயலி உபயோகம் செய்து வந்துள்ளார். 

இந்நிலையில், டிக் டாக்கில் எப்போதும் எதாவது ஒரு சேலஞ் வந்து வைரலாகும். சமீபத்தில் BENADRYL CHALLENGE என்பது வைரலாகியுள்ளது. அதன்படி காய்ச்சல் மற்றும் சளி சிரப்களை அதிகளவு அருந்துவது தான். 

பலரும் இந்த செயல்முறையை செய்ததாக கூறப்படும் நிலையில், சிறுவனும் அளவுக்கு அதிகமாக மருந்துகளை குடித்து இருக்கிறான். இதனால் ஒருவாரம் மருத்துவமனையில் உயிருக்கு போராடி பரிதாபமாக சிறுவன் உயிரிழந்து இருக்கிறான். 

இந்த தகவலை ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ள சிறுவனின் பெற்றோர், தங்களின் பிள்ளைகளை இவ்வாறான ஆபத்து நிறைந்த சேலஞ்சை செய்ய அனுமதிக்க வேண்டாம். அவர்களை கண்காணியுங்கள் என்று கூறியுள்ளனர்.